சுவிட்சர்லாந்தில் கடந்த 2023ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட குழந்தை பெயர்கள் தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல ஊடக நிறுவனம் ஒன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மிகவும் பிரபலமான பெயர்களாக மியா மற்றும் நோவா ஆகிய பெயர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டிலும் ஆண் பிள்ளைகளுக்கு நோவா என்ற பெயர் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது.
அதே நிலைமை 2023 ஆம் ஆண்டிலும் நீடித்துள்ளது.
இதேவேளை பெண் குழந்தைகளுக்கு மியா என்ற பெயர் கூடுதலாக சூட்டப்பட்டுள்ளது.
2013 2015 2016 மற்றும் 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் மியா என்ற பெயர் முதல் நிலை வசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆண் பிள்ளைகளுக்கு நோவா என்ற பெயருக்கு அடுத்தபடியாக லியம் மற்றும் மாட்டியோ ஆகிய இரண்டு பெயர்களும் அதிக அளவில் சூட்டப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளை பொருத்தவரையில் அதிக அளவு சூட்டப்பட்ட பெயராக மியா காணப்படுவதுடன் இரண்டாம், மூன்றாம் இடத்தை எமா மற்றும் சோபியா ஆகிய பெயர்கள் வகிக்கின்றன.