கிரேக்கத்திற்கு சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிரேக்கத்தின் சிய்மி தீவுகளில் இடம்பெற்ற படகு விபத்து ஒன்றில் குறித்த சுவிஸ் சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.
33 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த சுற்றுலா பயணி சுயநினைவை இழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக அவருக்கு மருத்துவர் ஒருவரினால் முதலுதவி வழங்கப்பட்டு போதிலும் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் மருத்துவ நிலையம் ஒன்றின் மருத்துவர் குறித்த நபருக்கு சிகிச்சை வழங்கியுள்ளார்.
மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.