கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கான பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் முதல் இணைய வழியில் முன்கூட்டியே கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
வருகை தரும் வரிசை கிரமத்திற்கு அமைய முதலில் வரும் 750 பேருக்கு கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் வழங்குவதில் இன்று முதல் வரையறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திடீரென எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு எதிரில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கையிருப்பில் உள்ள கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட அளவில் காணப்படுவதனால் ஒரு நாளைக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளை எண்ணிக்கையை மட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று அதிகாலை முதல் பத்தரமுல்லவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
சில நாட்களாகவே சிலர் இந்த வரிசையில் காத்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு இது தொடர்பிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் இறுதியளவில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.