சுவிட்சர்லாந்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு முதுமை எட்டி விட்டதாக கருதும் வயது எல்லையாக 80 வயது கருதப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் ஒருவர் 80 வயதை அடைந்து விட்டால், அவர் தான் வயதடைந்து விடுவதால் விட்டதா கருதுவார் என தெரிவிக்கப்படுகிறது.
1990களில் 69 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதுமை அடைந்து விட்டதாக கருதியதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மக்கள் மத்தியில் வயது மூப்பு தொடர்பில் நிலவும் மனப்பாங்கினை வெளிப்படுத்தும் வகையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மொனொராமா சொசைட்டி என்ற அமைப்பினால் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
முதியவர்கள் மத்தியில் வருமான ஏற்றத்தாழ்வும் நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.