சுவிட்சர்லாந்தின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான சூரிச் விமான நிலையத்தின் வருமானம் மற்றும் லாபம் என்பன அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இவ்வாறு லாபம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 31 மில்லியன் அளவில் விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக விமான நிலையத்தின் வருமானம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியை விடவும் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் வருமானம் ஒன்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இதுவரையில் சூரிச் இந்த ஆண்டில் இதுவரையில் சூரிச் விமான நிலையத்தை 14.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாகவும், ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 31 மில்லியனாக அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.