இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வெற்றியைத் கூடிய வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அண்மையில் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 39 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதில் முகமட் இலியாஸ் என்ற வேட்பாளர் காலமானார்.
இதன்படி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரியநேத்திரன் உள்ளிட்ட பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் வெற்றி தொடர்பில் தற்போதைக்கு பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வு பிரிவினர் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் போன்றனவும் இந்த தேர்தலில் யார் வெற்றி ஈட்டுவார் என்பது குறித்த கருத்து கணிப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் அனுரகுமார திசாநாயக்கவிற்கான ஆதரவு அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி தகவல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
நாமல் ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.
அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வழமைக்கு மாறான அடிப்படையில் வாக்குறுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை கவனிக்கத்தக்கது.
இதுவரையில் எந்தவொரு கட்சிக்கும் வலுவான ஆதரவு இந்த தேர்தலில் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.