சுவிட்சர்லாந்தில் மலிவு விலைவில் சீன இலத்திரனியல் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றமை உள்நாட்டு கார் உற்பத்தியாளர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
சீன உற்பத்தியான இந்த ஈ கார்களை சுமார் 20000 சுவிஸ் பிராங்குகளுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leapmotor என்ற சீன கார் உற்பத்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, சீன அரசாங்கத்துக்கு சொந்தமான டோங்பெக் என்ற நிறுவனமும் மிகக் குறைந்த விலையிலான இலத்திரனியல் கார்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்கின்றது.
டோக்பெக் நிறுவனத்தின் Nammi Box என்ற இந்த புதிய வகை ஈ-கார்கள் சுவிட்சர்லாந்தில் இலையுதிர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு விலை குறைந்த கார்களின் அறிமுகமானது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
விலை குறைந்த அதிக எண்ணிக்கையிலான இலத்திரனியல் கார்களின் அறிமுகம் ஐரோப்பிய கார் உற்பத்தியாளர்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ரி03 சிறிய ரக ஈகார் இருபதாயிரம் சுவிஸ் பிராங்குகளை விடவும் குறைந்த விலையில் சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்பய்படுகின்றது.
தற்பொழுது டோங்பெக் Nammi என்ற பண்டக்குறியைக் கொண்ட மலிவு விலை கார்களின் மூலம் ஐரோப்பிய சந்தையை கவர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
புதிய கார்களை சுவிஸ் இணைய தளத்தின் ஊடாக பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் இதன் ஆரம்ப விலை 21990 சுவிஸ் பிராங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் விலை உயர்ந்த கார்களுக்கு போட்டியாக சீன நிறுவனங்கள் மலிவு விலை கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் சீன இலத்திரனியல் கார்கள் மீதான வரியை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.