சுவிட்சர்லாந்தின் சென் கேலன் கான்டனில் இறைச்சியில் அதிகளவு இரசாயனம் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இறைச்சி, பால் மற்றும் மண் என்பனவற்றில் புளோரோ என்ற வகை இரசாயனம் இறைச்சியில் கலந்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றின் ஊடாக மனித உடலுக்குள் இரசாயனம் கலப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதிகளவு இரசாயனம் சேர்வதனால் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், உணவு வகைகளினால் உடலுக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.