காலநிலை மாற்றம் தொடர்பில் சுவிட்சர்லாந்தின் கான்டன்கள் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காலநிலை பாதுகாப்பு அடிப்படையில் பாரிஸ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்த பாரிஸ் உடன்படிக்கையின் பிரகாரம் எந்தவொரு கான்டனும் செயற்படவில்லை என என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் 26 கான்டன்களில் ஒரு கான்டனும் இந்த கொள்கைகள் அமல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை அமல்படுத்துவதன் மூலம் உலகம் வெப்பமாவதை வரையறுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வீடுகளை வெப்பமாக்க பயன்படுத்தப்படும் ஹீட்டர்களை சுற்றுச்சூழலுக்கு சாதகமானவைகளாக பதிலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.