அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் கமலா ஹரிஸ் முன்னணி வகிப்பதாக கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்பொதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எதிர்வரும் தேர்தலில் யார் வெற்றியீட்டுவார் என்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தற்போதைய கருத்துக் கணிப்புக்களின் பிரகாரம் ஹாரிஸ் 45 வீத வாக்குகளையும், ட்ராம்ப் 41 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் முதனிலை செய்தி சேவை நிறுவனமான ரொய்டர்ஸ் நிறுவனத்தினால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஹரிஸிற்கு பெண்கள் கூடுதலாக ஆதரவளிப்பதாகவும் ஆண்கள் ட்ராம்பிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.