ஐரோப்பா முழுவதிலும் பாதுகாப்பற்ற பாலுறவு சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளினால் இளம் தலைமுறையினர் மத்தியில் பால்வினை நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
242000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பதின்ம வயதுடைய ஆண் பிள்ளைகள் ஆணுறைகளை பயன்படுத்துவது வெகுவாக குறைவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தில் இளைய தலைமுறையினர் ஓரளவு பாதுகாப்பான முறையில் பாலுறவு கொள்வதகாத் தெரிவிக்கப்படுகின்றது.
மிக இள வயதில் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொள்வது பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.