காலநிலை மாற்றம் தொடர்பில் காலநிலை பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
காலநிலை பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை மீறி செயல்படுவதாக சுவிட்சர்லாந்து மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் சுவிட்சர்லாந்து அவ்வாறு விதி வீரர்களின் ஈடுபடவில்லை என அரசாங்கம் தெரு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் காலநிலை தொடர்பிலான இலக்குகளை அடையும் முனைப்புகளுடன் நாடு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் காலநிலை மாற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக வயோதிப பெண்கள் குழு ஒன்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசாங்கம் தவறிழைத்துள்ளதாக தீர்ப்பு வழங்கி இருந்தது.
முதல் தடவையாக காலநிலை மாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நாடு ஒன்றின் மீது குற்றம் சுமத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு எனினும் இந்த தீர்ப்பு குறித்து அரசாங்கம் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.