இலங்கையில் கடவுச்சீட்டு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்காக அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியிலும் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையிலும் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு வழங்குவதற்கு போதியளவு கடவுச்சீட்டுக்கள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி அளவில் ஒரு தொகுதி கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியினால் இவ்வாறு சர்ச்சை எற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்துவது இதை விடவும் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்திருக்க வேண்டுமென அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் பொது மக்கள் எதிர்நோக்கி வரும் அசௌகரிய நிலைமைகளுக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் தற்பொழுது கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதுடன் மக்கள் நீண்ட வரையில் சில நாட்கள் வரையில் காத்திருந்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளது.