சுவிட்சர்லாந்தின் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்களில் பயணிகளை facial recognition முறையில் அடையாளம் காண்பதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
அரசாங்கம் இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.
பயணிகளை கையாளும் போது பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசாங்கம் கோரியுள்ளது.
நாட்டின் விமான போக்குவரத்து சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனையொன்றை சுவிட்சர்லாந்து அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையிலான நடைமுறைகளின் ஊடாக, பயணிகள் கடதாசியிலான டிக்கெட் அல்லது இலத்திரனியல் போர்டிங் பாஸ்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
பயணப் பொதிகளை கையாளுதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் விமானத்திற்குள் பிரவேசிப்பதற்கும் வழி அமைக்கும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறு எனினும் பயோமெட்ரிக் தகவல்களை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைப் பணியாளர்கள் பயன்படுத்துவது தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தரவுகளை யார் பயன்படுத்த முடியும் என்பது குறித்து சில வரையறைகள் பிறப்பிக்கப்பட உள்ளது.
இதேவேளை, பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்த விரும்பாத பயணிகளுக்கு மாற்று வழிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த யோசனை குறித்து ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.