ஐரோப்பாவின் சிறந்த ரயில் நிலையங்களகாக சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் பேர்ன் ரயில் நிலையங்கள் தெரிவாகியுள்ளன.
ஐரோப்பாவின் இந்த ஆண்டுக்கான சிறந்த ரயில் நிலையங்கள் குறித்த சுட்டி வெளியிடப்பட்டுள்ளது.
சூரிச் ரயில் நிலையம் முதலாம் இடத்தையும், பேர்ன் ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
ஐரோப்பா முழுவதிலும் காணப்படும் சுமார் 50 பிரான ரயில் நிலையங்கள் இந்த மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் சேவை, இலவச வைபை வசதி, உள்நாட்டு மற்றும் தேசிய வலையமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.