எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் யூரோ விஷன் பாடல் போட்டி பேசல் நகரில் நடத்தப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தின் 2 நகரங்களில் இந்த போட்டியை நடத்துவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
ஜெனிவா மற்றும் பேசல் ஆகிய நகரங்கள் போட்டி நடாத்த கோரிக்கை முன் வைத்திருந்தன.
எவ்வாறெனினும், இந்த போட்டியை நடத்தும் நகராக பேசல் தெரிவு செய்யப்பட்டுள்ளது
St Jakobshalle என்னும் பகுதியில் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.
போட்டியை நடத்துவதற்காக பேசல் அரசாங்கத்திற்கு 30 முதல் 35 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சுவீடனின் மெல்மோவில் நடைபெற்ற போட்டியை 163 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர்.
36 ஆண்டுகளின் பின்னர் யூரோ விஷன் பாடல் போட்டி முதல் தடவையாக சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் யூரோ விஷன் போட்டியில் சுவிட்சர்லாந்தன் நெமோ வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.