சுவிட்சர்லாந்தின் மிக ஆபத்தான பெண் என கருதப்பட்ட பெண் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
23 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பெண்களை படுகொலை செய்ததாக இந்த பெண் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
கரோலின் எச் என்ற பெண்ணே இவ்வாறு தண்டிக்கப்பட்டு தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் சிறையில் நன்நடத்தையாக செயற்பட்ட காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று இந்தப் பெண்ணுக்கு கோபம் வருவதில்லை எனவும் சாந்தமாக நடந்து கொள்வதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1990ம் ஆண்டுகளில் இந்தப் பெண் இரண்டு பெண்களை படுகொலை செய்திருந்தார்