ஐரோப்பாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான லுஃப்தான்சா நிறுவனத்தின் துணை நிறுவனமான சுவிஸ் விமான சேவையின் சில விமானங்களின் புதிய முதல் வகுப்பு (First Class) இருக்கைகள் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த இருக்கைகள் மிகவும் கனமானவை மற்றும் விமானத்தின் சமநிலை சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே 2025 குளிர்காலத்தில் இருந்து சமனிலை பாதிக்கப்பட்ட விமானங்களில் ஈர்ப்பு மையத்தை சரி செய்ய ஈயத் தகடுகளை நிறுவ சுவிஸ் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சில விமானங்களின் முதல் வகுப்பு இருக்கைகளில் பிரச்சினை காணப்படுவதாக விமான சேவை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
விமானங்களில் முதல் மற்றும் வணிக வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதல் அளவில் தனியுரிமையை வழங்கும் வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், முதல் வகுப்பு மற்றும் வணி வகுப்பு இருக்கைகள் கடந்த காலத்தை விட எடை கூடிய கனமானவவாயக காணப்படுகின்றன.
இதேவேளை, எகனாமி வகுப்பில் இருக்கைகள் இலகுவாகி வருகின்றன.
விமானத்தின் எடை ஏற்ற இரக்கங்களினால் ” விமானத்தின் ஈர்ப்பு மையத்தில் சமனிலை இன்மையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிகப்படுகின்றது.
முதல் மற்றும் வணிக வகுப்பு பொதுவாக விமானத்தின் முன்புறத்தில் அமைந்திருப்பதால், அது விமானத்தின் “மூக்கு பகுதியை கனமாக” மாறி வருகின்றது.
சில விமான வகைகள் குறிப்பாக இந்த வளர்ச்சியால் பாதிக்கப்படுகின்றன.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் ஏர்பஸ் A333 ரக விமானத்தில் இந்த பாதிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது.
“Swiss Senses” எனப்படும் புதிய முதல் வகுப்பு கான்செப்ட் 2025 ஆம் ஆண்டு முதல் சுவிஸ் விமானங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சுவிஸ் இணையதளத்தின் படி, அதன் சொந்த அறைகளுடன் கூடிய இந்த புதிய இருக்கை கட்டமைப்பு எண்ணக்கரு நீண்ட தூர விமானங்களில் பயணிகளுக்கு “முழுமையான தனியுரிமை” உறுதியளிக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.