சுவிட்சர்லாந்தின் பேசலின் பேஸ்லர்கட் சிறைச்சாலையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
37 வயதான அல்ஜீரிய பிரஜை ஒருவரும், 22 வயதான டியூனிசிய பிரஜை ஒருவரும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தண்டனை அனுபவித்து வந்த இருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
கொலை முயற்சி, கொள்ளை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதானவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் தேடுதல் முயற்சி வெற்றியளிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.