ரஸ்யாவில் ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.
இந்த ஹெலிகொப்டரில் 22 பேர் பயணம் செய்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்யாவின் கமசாட்கா பகுதியில் இவ்வாறு ஹெலிகொப்டர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எம்.ஐ.8 ரக ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
19 சுற்றுலாப் பயணிகளும் 3 விமானப் பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இரண்டு என்ஞின்களைக் கொண்ட இந்த ஹெலிகொப்டர் அதிகளவில் ரஸ்யாவில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1960களில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த உலங்கு வானுர்திகள் அதிகளவில் விபத்துக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.