இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்திய உளவு பிரிவான ரோ ஆதிக்கம் செலுத்துவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று வார காலம் எஞ்சியுள்ள நிலையில் பிரபல அரசியல் மாற்றம் ஒன்று நடைபெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இந்திய புலனாய்வு பிரிவின் தலைவர் இலங்கைக்கு அவசர விஜயமென்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியஸ்தர் ஒருவருக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்குவதாக கூறி ஜனாதிபதி தேர்தலில் இடக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்திய உளவுப் பிரிவு பிரதானியின் இலங்கை விஜயத்தை தொடர்ந்து வடக்கின் அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் தருவாயில் இந்த அரசியல் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.