சுவிட்சர்லாந்திலிருந்து பெருந்தொகையான ஏதிலிகள் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சுமார் 4500 ஏதிலிகள் இவ்வாறு நாடு உடத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ள வெளிநாட்டுப் பிரஜைகளில் 2500 பேருக்கு கடவுச்சீட்டுக்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட ஏதிலி கோரிக்கையாளர்கள் இத்தாலிக்கு அனுப்பி வைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏதிலி கோரிக்கையாளர்கள் வன்முறைச் சம்பவங்களில் தொடர்புபடும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துச் செல்வதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.