இஸ்ரேலில் அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹமாஸ் போராளிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் போரை இடை நிறுத்துமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஹமாஸ் போராளிகளினால் கடத்திச் செல்லப்பட்ட ஆறு இஸ்ரேல் பணய கைதிகள் காசாவில் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலின் பிரதான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளன.
மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பாரிய அளவில் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி போர் ஆரம்பமானது முதல் இதுவரை இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய போராட்டங்களில் ஒன்றாக இந்தப் போராட்டம் கருதப்படுகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தெல் அவீவ் நகரின் பிரதான பாதைகள் முடக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.