சுவிட்சர்லாந்தின் முக்கிய சுரங்கப் பாதைகளில் ஒன்றான கோதார்ட் சுரங்கபாதை இன்றைய தினம் முதல் முழு அளவில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான ரயில்கள் இந்த சுரங்கப்பாதை வழியாக பயணம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக Bellinzonaலிருந்து ஓர் ரயில், சுரங்கப்பாதையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே திணைக்களம் இந்த தகவல்களை அறிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஏற்பட்ட விபத்து காரணமாக ரயில் சுரங்கப்பாதை சேதமடைந்தது.
இதனால் சுரங்கப்பாதை வழியான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஏழு கிலோமீட்டர்களைக் கொண்ட ரயில் பாதை முழுமையாக புணரமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுரங்கப் பாதை, திருத்த பணிகளுக்காக பொருட்களை கொண்டு செல்வதும் காலநிலை பிரச்சினைகளாலும் இந்த திருத்த பணிகளில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருத்தப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் முதல் சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்பட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.