இலங்கையில் சுற்றுலாத்துறை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன் அரைவல் வீசா நடைமுறையில் காணப்படும் குறைபாடுகளினால் இந்த அபாயம் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு கரும பீடங்களில் ஒன் அரைவல் வீசா பெற்றுக்கொள்ள வெளிநாட்டுப் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டுமென காவிந்த ஜயவர்தன கோரியுள்ளார்.
இலங்கை சுற்றுலாத்துறைக்கு முக்கியமான வகிபாகம் உண்டு எனவும், சுற்றுலாத்துறையில் ஏற்படக்கூடிய பாதிப்பு நாட்டில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வீசா பெறுவதில் எதிர்நோக்கி வரும் அசௌகரியம் குறித்து அண்மையில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில காவிந்த இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன் அரைவல் வீசா முறையை இலகுபடுத்துமாறு காவிந்த ஜயவர்தன கோரியுள்ளார்.