சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவில் எச்.ஐ.வி நோயாளி ஒருவர் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளார்.
உலகின் முன்னணி மருத்துவ சஞ்சிகைகளில் ஒன்றான “நேச்சர் மெடிசின்” என்ற சஞ்சிகையின் கட்டுரை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்கு பின்னர் 32 மாதங்களாக குறித்த நபருக்கு எச்.ஐ.வீ வைரஸ் கண்டறியப்படவில்லை என ஜெனிவா பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அந்த நபருக்கு ஜெனிவாவில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
உலகளவில், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏழு பேர் மட்டுமே எச்.ஐ.வி நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்திருக்கலாம் என கருதப்படுகின்றனர்.
இந்த எல்லா நிகழ்வுகளிலும், மாற்று அறுவை சிகிச்சையானது அரிதான CCR5 டெல்டா 32 மரபணு மாற்றத்தைக் கொண்ட ஒரு நன்கொடையாளரிடமிருந்து கிடைக்கப்பெற்றவை.
இவை கலன்களை இயற்கையாகவே எச்.ஐ.வீ தொற்கை எதிர்க்கும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியின் சிறப்பு அம்சம் என்னவென்றால், மாற்று அறுவை சிகிச்சை பிறழ்வைச் சுமக்காத ஒரு நன்கொடையாளரிடமிருந்து கிடைத்த எலும்பு மஜ்ஜை பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.