சுவிட்சர்லாந்தின் வோட் கான்டனில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் குண்டுப் பீதி ஏற்பட்டுள்ளது.
Yverdon-les-Bains பகுதியில் அமைந்துள்ள லியோன் மிஸ்சாட் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் குண்டுப் பீதி காரணமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பாடசாலை முழுவதும் பொலிஸாரும், வெடி குண்டு நிபுணர்களும் சோதனையிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்திலும், மாணவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை தொடர்ந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.