சுவிட்சர்லாந்தின் மத்திய ரயில்வே திணைக்களத்தில் இருந்து சில கிலோகிராம் எடையுடைய வெடிபொருட்கள் களவாடப்பட்டுள்ளன
இந்த வெடிபொருள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்தியின் சட்டமா அதிபர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கற்களை உடைப்பதற்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் பாதை அமைப்பதற்காக கற்களை உடைத்து பாதை அமைக்கும் பணிகளுக்காக கொள்வனவு செய்து களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.