சுவிட்சர்லாந்தில் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியினர் தாங்கள் களைப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வெறும் 15 வீதமானவர்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்களில் 35 வீதமானவர்கள் தாங்கள் பூரண உடல் நலத்துடன் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னதாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தாங்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணர்ந்த போதிலும் தற்பொழுது அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.