ஹமாஸ் இயக்கத்தை தடை செய்யும் சட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
ஹமாஸ் இயக்கத்தினை தடை செய்யப்பட்ட இயக்கமாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சட்டம் நாடாளுமன்றில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் இயக்கம், அதனுடன் தொடர்புடைய இயக்கங்கள், ஹமாஸ் இயக்கத்தின் சார்பிலான இயக்கங்கள் என்பனவற்றுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறிச் செயற்படுவோருக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.