சுவிட்சர்லாந்தில் இந்த கோடை காலத்தில் சுமார் 320000 மின்னல் தாக்கங்கள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அதிக எண்ணிக்கையிலான மின்னல் தாக்கம் கான்டனில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
பேர்ன் கான்டனில் 46412 இடி மின்னல் தாக்கங்களும், சென் கேலன் கான்டனில் 28,400 மின்னல் தான் நீங்களும் பதிவாகியுள்ளன.
ஜெர்மனிய மொழி பேசும் சுவிட்சர்லாந்து பகுதிகளில் அதிக அளவு மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 1ம் திகதி கிராபென்டன் கான்டனில் மிகவும் சக்தி வாய்ந்த மின்னல் தாக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 286000 அம்பியர் சக்தி வாய்ந்த மின்னல் தாக்கம் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு மின்னல் தாக்கங்களை விடவும் இந்த ஆண்டு கோடை காலத்தில் பாரிய அளவில் மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.