சுவிட்சர்லாந்தில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாத புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் வேலையற்றோர் எண்ணிக்கை 2.4 வீதமாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாத நிறைவில் 111,350 பேர் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்து கொண்டுள்ளனர்.
பிராந்திய வேலை வாய்ப்பு நிலையங்களில் இவ்வாறு பதிவு செய்து கொண்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்து பொருளாதார விவகார செயலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஜூலை மாத எண்ணிக்கையை விடவும் 3638 அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.