சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2025ம் ஆண்டில் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 10 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளது.
மத்திய மின்சார ஆணைக்குழு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சாதாரண குடும்பம் ஒன்று சராசரியாக 4500 KWH மின்சாரத்தை பயன்படுத்தினால் அந்தக் குடும்பத்தின் கட்டணம் 141 சுவிஸ் பிராங்குகளாக குறையும் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது இந்த தொகை 166 சுவிஸ் பிராங்குகளாக காணப்பட்டது.
மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.