உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான எயார் பஸ் விமான உற்பத்தி நிறுவனத்தின் ஏ350 1000 எஞ்சினை கொண்ட விமானங்களை பரிசோதனை இடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அண்மையில் கத்தே பசிபிக் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எயார் பஸ் ஏ-350 விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இந்த இயந்திர கோளாறு காரணமாக சில விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
எனவே ஏ 350 ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து பரிசோதனை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் எரிபொருள் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு இருந்ததாக சர்வதேச ஊடக ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மூன்று முதல் 30 நாட்களுக்குள் விமானங்களை பரிசோதனையிடுமாறு ஐரோப்பிய ஒன்றிய வான் பாதுகாப்பு முகவர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
கத்தே பசுபிக் நிறுவனம் ஏற்கனவே உள்ளக ரீதியாக இந்த விமானத்தை பரிசோதனை இட தொடங்கியுள்ளது.
முன் எச்சரிக்கை அடிப்படையில் இப்ப இவ்வாறு சிங்கப்பூர் ஜப்பான் போன்ற நாடுகளும் இந்த ரக விமானங்களை பரிசோதனை இடுகின்றமை குறிப்பிடத்தக்கது.