காசாவில் பாரிய மனித பேரவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட காசா மக்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான உணவு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மத்திய மற்றும் தென் காசா பகுதிகளில் மக்கள் உணவு நிவாரணங்களை பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் சேமாமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசா பிராந்தியத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு இஸ்ரேலிய படையினர் இடையூறு ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தென் பகுதியல் 160000 சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
எனினும், 340,000 சிறுவர்களுக்கு வழங்கப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய படையினர் கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக பலஸ்தீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மனித உரிமை பாதுகாப்பு விவகாரங்களில் சர்வதேச சமூகம் உரிய முனைப்பு காட்ட வேண்டுமென பலஸ்தீனம் கோரியுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிய படையினர் லெபனான் மீது வெள்ளை பொஸ்பரஸ் அடங்கிய ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களின் பிரகாரம் வெள்ளைப் பொஸ்பரஸ் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.