சுவிட்சர்லாந்தில் கொலை குற்றச்சாட்டில் 87 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது வாழ்க்கை துணையான 82 வயது பெண்ணை இவர் படுகொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது வாழ்க்கை துணை மூச்செடுக்கவில்லை என சூரிச் உயிர் காப்பு நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த உயிர்காப்பு பணியாளர்கள் குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகள் இப்போது குறித்த பெண் கொல்லப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் குறித்த வயோதிப பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.