சுவிட்சர்லாந்தில் ஓட்டுனர் உரிமம் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நீல நிறத்திலான ஓட்டுனர் உரிமங்களை இனி பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாட்டில் சுமார் 330,000 நீல ஓட்டுனர் உரிமங்கள் புழக்கத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீல நிற ஓட்டுனர் உரிமங்களை வைத்திருப்போர் உடனடியாக நவீன அட்டை முறையிலான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் கடதாசி வடிவில் காணப்படும் ஓட்டுனர் உரிமங்கள் முழுமையாக செல்லுபடியற்றதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓட்டுனர் உரிமத்தைக் காண்பிப்போர் மீது அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் கடன் அட்டை அளவிலான புதிய டிஜிட்டல் ஓட்டுனர் உரிமங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பழைய கடதாசியிலான ஓட்டுனர் உரிமம் சர்வதேச சட்டங்களுக்கு அமையவாக பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டால் ஐரோப்பிய நாடுகளில் தனியாக ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.