ஜெனீவாவிலிருந்து கூடுதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
குளிர் காலத்தில் ஜெனீவாவிலிருந்து பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
ஒக்ரோபர் மாத இறுதியில் பேர்ளினுக்கு நாளாந்தம் நேரடி விமான சேவை ஜெனீவாவிலீருந்து முன்னெடுக்கப்பட உள்ளது.
ஸ்கென்டினேவியாவிற்கான விமானப் பயணங்களும் அதிகரிக்கப்பட உள்ளது.
கோபன்கென், ஸ்டோகொம், கோதன்பேர்க் மற்றும் ஒஸ்லோவிற்கான விமானப் பயணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது.
குளிர் காலத்தில் ஜெனீவாவிலிருந்து 21 குறைந்த தூர விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி முதல் இந்த விமானப் பயணங்களுக்கான டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.