ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஒரு மகன் சுவிட்ச்லாந்தில் பிறந்தவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு புட்டினின் மகன் சுவிட்சர்லாந்தில் பிறந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
புட்டினின் வாழ்க்கைத் துணையான அலீனா கபகேவாவின் மூத்த மகன் பெண் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள நுகானு மருத்துவமனையில் பிறந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு புட்டின், லியுட்மிலா என்ற தனது மனைவியை விவாகரத்து செய்திருந்தார்.
அதன் பின்னர் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான கபகேவாவுடன் தொடர்பு பேணுவதாக அறிவித்திருந்தார்.
இந்த இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த ஆண் குழந்தைகளில் முதல் குழந்தை சுவிட்சர்லாந்தில் பிறந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் செல்வந்தர்கள் மகப்பேற்றிற்காக சுவிட்சர்லாந்தை தேர்வு செய்வது வழமையானது என தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் தனது முதல் குழந்தையை சுவிட்சர்லாந்தில் பிரசவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.