காசாவில் கடந்த 48 மணித்தியாலங்களில் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் சுகாதார அமைச்சு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக இதுவரையில் 40939 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 94616 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் சுமார் 16500 பேர் சிறுவர்கள் என்பதுடன் பத்தாயிம் சிறுவர்களை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விரைவில் காசா போர் நிறுத்த உத்தேச உடன்படிக்கை வெளியிடப்படும் என சீ.ஐ.ஏவின் பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பிலான விரிவான திட்டங்களுடன் இந்த ஆவணம் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான முனைப்புக்களில் அமெரிக்காவும் ஏனைய மத்தியஸ்த நாடுகளும் அயராது உழைத்து வருவதாக வில்லியம் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார்.