குடியேறிகள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படும் என பிரான்ஸ் பிரதமர் மைக்கல் பார்னியர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இமெனுவல் மெக்ரோனின் சில கொள்கைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாக பார்னியர் தெரிவித்துள்ளார்.
மெக்ரோனின் சில பிரபல்யமற்ற தீர்மானங்களை தொடர்ந்தும் அமுல்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஓய்வு பெறும் வயதெல்லை, குடியேறிகள் விவகாரம் உள்ளிட்ட கொள்கைகள் தொடர்ந்தும் பின்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்களை அமுல்படுத்த பின்நிற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.