சுவிட்சர்லாந்தில் தானியங்கி அடிப்படையில் செலுத்தக்கூடிய வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டில் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
தானியங்கி வாகன செலுத்துகையின் 3ம் நிலையைக் கொண்ட வாகனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்து வீதிகளில் தானியங்கி வாகன செலுத்துகளை தொடர்பில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த புதிய முறையின் கீழ் சாரதிகள் வாகனத்தின் ஸ்டியரிங்கிலிருந்து கைகளை எடுத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
தானியங்கி அடிப்படையில் வாகனம் செலுத்தும் போது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப் பகுதியில் வாகன விபத்து மரணங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ ஆகிய பண்டக்குறிகளைக் கொண்ட வாகனங்களில் தானியங்கி அடிப்படையில் வாகன செலுத்தக்கூடிய முறைமை காணப்படுகின்றது.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் தானியங்கி முறையில் வாகனம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.