அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக விதிக்கப்பட உள்ள தண்டனை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நிதி மோசடி தொடர்பில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி ஜுவான் மார்ச்சான் அறிவித்துள்ளார்.
இந்த தண்டனை விதிப்பானது தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தண்டனை விதிப்பு காலம் தாழ்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி தண்டனை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த தண்டனை விதிப்பினை ஒத்தி வைக்குமாறு டிரம்பின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த மே மாதம் ட்ரம்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதில் ஆபாச திரைப்பட நடிகை ஒருவருக்கு டிரம்ப் சட்டவிரோதமான முறையில் பணம் வழங்கியிருந்தார் என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய தகவல்களை வெளியிடாதிருப்பதற்காக கையூட்டல் அடிப்படையில் இந்த பணம் குறித்த நடிகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டு உச்சநீதிமன்றம் நிரூபணம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பு தொடர்பிலான தண்டனை அறிவிப்பு காலம் தாழ்த்தப்படும் என நீதிமன்றம் தற்பொழுது அறிவித்துள்ளது.