இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் தொடர்பிலான சாட்சியங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்றைய தினம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் அடக்குமுறைகளை மேற்கொள்வது குறித்த புதிய சட்ட முன்மொழிவுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
ஜெனீவாவிற்கான சுவிட்சர்லாந்து பிரதிநிதி ஜூர்க் லாபுர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீடிப்பது குறித்தும் சுவிட்சர்லாந்து கரிசனை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நிகழ்நிலை சட்டம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.