இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் சிரியாவில் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவின் அரச ஊடகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
மத்திய சிரியாவின் மாசியாப் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவின் அதிகாரப்பூர்வ அரசு செய்தி ஊடகமான சானா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியாவின் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிய படையினரின் வான் தாக்குதல்களை முறியடித்ததாக சிரிய வான் படையினர் தெரிவிக்கின்றனர்.
லெபனானில் இருந்து சிரியா மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பொதுமக்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினர் நீண்ட காலமாக சிரிய நிலைகள் மீது இடைக்கிடை தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பாக ஈரானுடன் தொடர்புடைய இடங்கள் இவ்வாறு இலக்கு வைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.