சுவிட்சர்லாந்தில் பெண் அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக உள்நாட்டு ரீதியிலும் வெளிநாட்டு வெளிநாடுகளிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் அரசியல்வாதி கிறிஸ்தவ மதத்தை அவதூறு செய்யும் வகையில் அண்மையில் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அன்னை மரியாள் மற்றும் குழந்தை இயேசு உருவப்படங்களின் மீது துப்பாக்கியால் சுடும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
மன அழுத்தம் ஏற்படும் போது தாம் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னை ஆறுதல் படுத்திக் கொள்வதாக அவர் கூறியிருந்தார்.
சான்ஜியா எமெட்டி (Sanija Ameti )என்ற பெண் அரசியல்வாதியே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இவர் பசுமை லிபரல் கட்சியின் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை தொடர்பில் அவர் பகிரங்க மன்னிப்பு கோரி இருந்தார்.
குழந்தை இயேசு மற்றும் அன்னை மரியாவின் உருவப்படங்கள் மீது துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருந்தார்.
தாம் தமது ஓய்வு நேரத்தில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், அது தமது மன அழுத்தத்தை குறைக்கும் எனவும் அவர் குறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ரஸ்யா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவரது அரசியல் செயற்பாடுகளையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.