அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் அலைபேசிகளை கையில் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் விளையாடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற செயலிகளை சிறுவர்கள் பயன்படுத்துவதனை தடை செய்வது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த சமூக ஊடக பயன்பாடு இளைய தலைமுறை உளவியல் ரீதியாக பாதிப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எதிர்காலம் காலங்களில் இந்த சமூக ஊடக செயலி பயன்பாட்டிற்கு வயதெல்லை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
அதன் அடிப்படையிலேயே சமூக ஊடக பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 வயது முதல் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக பயன்பாடு சிறுவர்கள் மத்தியில் பாரிய சமூக சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் சமூக ஊடக பயன்பாட்டுக்கு வரையறைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.