5.6 C
Switzerland
Friday, October 4, 2024

அமெரிக்காவில் தவறாக தண்டிக்கப்பட்டவருக்கு 50 மில்லியன் நட்டஈடு

Must Read

அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு 50 மில்லியன் டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயதான சிக்காகோவைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்றதாக மார்ஷல் பிரவுன் என்பவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனை பிழையாக வழங்கப்பட்டது என தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நட்ட ஈடாக வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.

மார்ஷல் பிரவுன் என்ற 34 வயதான நபருக்கு நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

படுகொலை செயலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி இந்த தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறு எனினும் நீதிமன்றம் தவறாக தண்டனை விதிக்கப்பட்டதாக பின்னர் தெரிய வந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் குறித்த நபர் சிறையில் தண்டனை அனுபவித்திருந்தார்.

அதன் பின்னர் குறித்த நபருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவருக்கு விடுதலை வழங்கப்பட்டது.

தவறுதலாக தான் தண்டிக்கப்பட்டமைக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி குறித்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைகளின் பின்னர் குறித்த நபருக்கு 50 மில்லியன் டொலர்கள் நட்டு ஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொலிஸார் போலியான சாட்சியங்களை சமர்ப்பித்து போலி வாக்குமூலங்களை சமர்ப்பித்து சந்தேக நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

30 மணித்தியாலங்களுக்கு மேல் உணவு எதனையும் வழங்காது உறங்க விடாது சித்திரவதை செய்து போலி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES