சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
குடியிருப்பு தொகுதிகள் மற்றும் வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் 51974 வீடுகள் மட்டுமே காலியாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது நாட்டின் மொத்த தனி வீடுகள் மட்டும் குடியிருப்புகளின் ஒரு வீதம் மட்டுமே என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக வீடுகள் காலியாக இருக்கும் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் வீடுகள் வாடகைக்கு பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.