உலகின் முதல் நிலை விமான சேவைகளை வழங்கும் நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து திகழ்ந்து வருகின்றது.
நேர முகாமைத்துவம், வினைதிறன் நம்பகத்தன்மை போன்ற விடயங்களில் சுவிட்சர்லாந்து விமான போக்குவரத்து துறை சிறந்த நன்மதிப்பை கொண்டுள்ளது.
எவ்வாறு எனினும் இந்த நன்மதிப்பானது சற்றே பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த கோடை காலத்தில் சுவிஸ் விமான சேவை நிறுவனமும் சூரிச் விமான நிலையமும் நிலையங்களும் தங்களது வழமையான நண்பர்கள் தன்மையை தொடர்பில் பின்னடைவை சந்தித்துள்ளன.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவின் 20 விமான சேவை நிறுவனங்களுடன் ஒப்பீடு செய்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 20ம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 4ம் திகதி வரையிலான காலப்பகுதியில் விமான பயணங்கள் தொடர்பிலான தாமதங்கள், விமான பயண ரத்துக்கள் என்பனவற்றின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
குறிப்பாக ஐரோப்பிய கோடை காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விமான பயணங்களை ரத்து செய்தல் மற்றும் காலம் தாழ்த்தப்படமை உள்ளிட்டன தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
விமான பயணங்கள் 2.5 வீதமான அளவில் ரத்து செய்யப்பட்டதுடன், 39 வீதமான விமான பயணங்கள் காலம் தாமதிக்கப்பட்டுள்ளன.
43 விதமான சுவிஸ் விமானங்கள் சுமார் 15 நிமிட கால தாமதத்துடன் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய விமான நிலையங்களில் அதிக அளவு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்ட விமான நிலையங்களின் வரிசையில் ஜூரிச் விமான நிலையம் நான்காம் இடத்தை வகிக்கின்றது.
சுவிட்சர்லாந்து மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இவ்வாறு விமான பயண காலம் தாழ்த்துகை மற்றும் விமான பயண ரத்து போன்றன பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புற காரணிகளின் அடிப்படையிலும் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், காலம் தாழ்த்தப்பட்டதாகவும் சுவிஸ் விமான சேவை நிறுவனமும் சூரிச் விமான நிலையமும் தகவல் வெளியிட்டுள்ளன.